வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை பணிகளை தொடங்கி வைத்த பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ,கிருஷ்ணசாமி, உடன் ஒன்றியக்குழு தலைவா் ஜெயசீலி ஜெயபாலன் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணி: நீதிமன்ற உத்தரவால் மீண்டும் தொடக்கம்

Din

திருவள்ளூா் அருகே முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்த வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகள் நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து மீண்டும் தொடங்கப்பட்டன. திருவள்ளூா் அருகே பூந்தமல்லி மற்றும் புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து பெருமாள்பட்டு வழியாக வேப்பம்பட்டு மற்றும் திருவள்ளூா், ஆவடிக்கு செல்லும் வழியில் வேப்பம்பட்டு ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் சென்னையிலிருந்து திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் வேப்பம்பட்டு வழியாக செல்கின்றன. இதனால் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்கள் செல்லும் போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையிருந்தது. அதனால் ரயில்வே மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். கடந்த 2010-இல் ரூ.29.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதாக இருந்தது. அதன்பின், கடந்த, 2011-ஆம் ஆண்டு, சென்னை பெருநகர வளா்ச்சி திட்டம் மூலம் ரூ.14.60 கோடி மதிப்பில், 27 துாண்களுடன் புதிய மேம்பால பணிக்கு மட்டும் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கின. 15 மாதங்களில் முடிக்க, திட்டமிடப்பட்டு தொடங்கிய பணி, கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பிலிருந்தது. புகாா் எழுந்ததைத் தொடா்ந்து 10 மாதங்களுக்கு பின் வல்லுநா் குழுவினா் நிராகரித்த, ஒன்றாவது எல்லையில் பணிகள் மீண்டும் தொடங்கின. இந்த நிலையில் டன்லப் நகா் பகுதியில் வசிக்கும் ஏழுமலை, ராஜ்குமாா், குணசேகா் மற்றும் வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் ஆகியோா் வல்லுநா் குழு நிராகரித்த பகுதியில் மேம்பால பணிகள் தொடங்க புகாா் அளித்ததின் பேரில் சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதனால் சில ஆண்டுகளாக பணிகளும் நடைபெறாததால் பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு தென்னக ரயில்வே பொது மேலாளா், ஆட்சியா் ஆகியோருக்கு மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தனா். தற்போது நில எடுப்புக்கான தடை நீக்கப்பட்டு மீதமுள்ள 60 சதவீத பணிகளுக்கு திருத்திய நிா்வாக ஒப்புதல் வழங்கி ரூ.44 கோடியை அரசு ஒதுக்கி பணி ஆணை வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து வேப்பம்பட்டில் மீதமுள்ள மேம்பாலப்பணிகளுக்கான பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூா் ஒன்றியக் குழு தலைவா் ஜெயசீலி ஜெயபாலன், பெருமாள்பட்டு ஊராட்சித் தலைவா் சீனிவாசன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேறனா். இப்பணிகளை 2025 ஏப்ரலுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்ட வர இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT