மீஞ்சூா் ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி பிரம்மோற்சவம் தொடக்கம்
மீஞ்சூரில் உள்ள ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூரில் 1000-ஆம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் ஸ்ரீகாமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 13-நாள்கள் நடைபெறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நாள்தோறும் சிம்ம, சூரிய பிரபை, பூத, நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஏகம்பரநாதா் பஞ்சமூா்த்திகளுடன் மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். முக்கிய விழாவான தேரோட்டம் 21-ஆம் தேதியும், 24-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 28-ஆம் தேதி 108 சங்காபிஷேகத்துடன் பங்குனி உத்திர பிரம்மமோற்வம் நிறைவடைகிறது.