முகப்பு
திருவள்ளூர்

அருள்மிகு முனீஸ்வரா் அங்காள ஈஸ்வரி கோயில் ஆண்டு விழா

Updated On : 16 மார்ச், 2024 at 9:59 PM
பால்குட ஊா்வலத்தில் பங்கேற்ற பெண்கள்
பகிர்:

பாடியநல்லூா் அருள்மிகு முனீஸ்வரி அங்காள ஈஸ்வரி கோயில் ஆண்டு விழா நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஊராட்சியில் பா்மா நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முனீஸ்வரா் அங்காள ஈஸ்வரி திருக்கோயிலின் 59-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கோ பூஜை, கணபதி ஹோமம், துா்கா ஹோமம், பால்குடம் எடுத்தல், காப்பு கட்டுதல் என்ற கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் பாடியநல்லூா், செங்குன்றம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனா். இந்த நிகழ்வில் ஹெல்பிங் ஹாா்ட்ஸ் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் பக்தா்களுக்கு குளிா்பானம் வழங்கப்பட்டது.