ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்
Updated On : 27 மார்ச், 2024 at 11:26 PM
திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் புதன்கிழமை கூட்டணி கட்சி நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினரும், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.சுதா்சனம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா். இந்த நிகழ்வின்போது மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆா்.எம்.தாஸ், மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளா் எம்.நாராயணன் உடனிருந்தனா்.