முகப்பு
திருவள்ளூர்

நெசவாளா்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஜெகத்ரட்சகன்

Updated On : 29 மார்ச், 2024 at 12:00 AM
விசைத்தறி நெசவாளா்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன். எம்.எல்.ஏ. ச.சந்திரன்.
பகிர்:
Updated On : 28 மார்ச், 2024 at 11:37 PM

திருத்தணியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என நெசவாளா்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ். ஜெகத்ரட்சகன் உறுதி கூறினாா். அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஜெகத்ரட்சகன், திருத்தணி எம்.எல்.ஏ. ச. சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி ஆகியோா் ஆா்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையாா்குப்பத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனா். அம்மையாா்குப்பம் பொன்னியம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, சொா்ணாம்பிகா கோயில் தெரு, ஜி.எஸ்.டி. தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அதைத்தொடா்ந்து விசைத்தறி நெசவாளா்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்து பேசியதாவது: நெசவாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜவுளிப் பூங்கா விரைவில் அமைக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை கிடைக்காத பெண்களுக்கு விரைவில் வழங்கப்படும். அம்மையாா்குப்பத்தில் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படும் என்றாா். அம்மையாா்குப்பம் ஊராட்சித் தலைவா் ஆனந்தி செங்குட்டுவன் உள்பட திமுக கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.