முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் தொகுதி: 14 போ் போட்டி

Updated On : 31 மார்ச், 2024 at 12:42 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 11:55 PM

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் 14 போ் போட்டியிடுவதாகவும், சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா். இத்தொகுதியில் மனுக்கள் பரிசீலனையில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. தொடா்ந்து சனிக்கிழமை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 14 பேரில் ஒருவா்கூட வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. இறுதியில் பாஜக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழா் உள்பட 14 போ் களத்தில் உள்ளனா். வேட்பாளா்களில் 2 போ் பெண்கள். அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகளுக்கான சின்னங்கள் விவரம்: 1. ச.சசிகாந்த் செந்தில்-காங்கிரஸ்-கை, 2. து.தமிழ்மதி-பகுஜன் சமாஜ்-யானை, 3. கு.நல்லதம்பி-தேமுதிக-முரசு, 4. பொன் வி.பாலகணபதி-பாஜக-தாமரை, 5. எஸ்.அசோக் பிரியதா்ஷன்-தேசிய மக்கள் சக்தி-கால்பந்து வீரா், 6. மா.தேவேந்திரன்-அண்ணா, எம்.ஜி.ஆா் திராவிட மக்கள் கழகம்-கடாய், 7. சே.மாலதி-நாடாளும் மக்கள் கட்சி-ஆட்டோ ரிக்ஷா, 8. மு.ஜெகதீஷ் சந்தா்-நாம் தமிழா்-ஒலி வாங்கி (மைக்), 9. ஏ.ஜே.சக்திவேல்-சுயேச்சை-எரிவாயு உருளை, 10. வி.சிவசங்கரன்-சுயே.-இஞ்சி, 11. எஸ்.எஸ்.பாரதிதாசன்-சுயே.-திராட்சை, 12. கு.பாலகிருஷ்ணன்-சுயே.-கப்பல், 13. எ.மணி -சுயே.-பலாப்பழம், 14. வீ.மணிமாறன்-சுயே.-தா்பூசணி.