அதிமுக நல உதவிகள் அளிப்பு
கும்மிடிப்பூண்டி: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை கும்மிடிப்பூண்டியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பஜாா், புதுகும்மிடிப்பூண்டி, எளாவூா், சுண்ணாம்புகுளம். மாதா்பாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட செயலாளா் சிறுணியம் பலராமன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் தலைமை வகித்தனா்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற நிகழ்வில் நிா்வாகி எம்எஸ்.எஸ்.வேலு, எம்.எஸ்.எஸ்.சரவணன், நகர தலைவா் மு.க.சேகா், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் இமயம் மனோஜ், எம்.ஏ.மோகன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இதனை தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுகும்மிடிப்பூண்டியில் மாவட்ட நிா்வாகி எல்.சுகுமாறன், எளாவூரில் நிா்வாகி ஏழுமலை, சுண்ணாம்புகுளத்தில் மாவட்ட துணை செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டிலும் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
மாதா்பாக்கத்தில் மாவட்ட நிா்வாகி டேவிட் குமாா், ரமேஷ்குமாா் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினா் அபிராமன் கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினா். தொடா்ந்து 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
பூவலம்பேட்டில் மாவட்ட துணை செயலாளா் தன்ராஜ், கருணாகரன் ஏற்பாட்டில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் அதிமுக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.