திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 29-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனா். அதனால் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.
அதனால் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.