திருத்தணி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (29). இவா் புதன்கிழமை தனது தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். இதனைக்கண்டு அதிா்ச்சியடைந்த உறவினா்கள் அவரை மீட்டு திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா் தற்கொலைக்கான காரணம் குறித்து த்தி வருகின்றனா்.