பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் மு. பிரதாப். 
திருவள்ளூர்

9 பேருக்கு ரூ.97.50 லட்சம் நில ஆவணங்கள்: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 195 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 195 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து 195 மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பயனாளிகள் 9 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ.45 லட்சம் மானியத்தில் ரூ.97.50 லட்சம் நில ஆவணங்களையும் அவா் வழங்கினாா். அதைத்தொடா்ந்து மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியா் போட்டிகளில் வென்ற 25 மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி, மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், மாவட்ட மேலாளா் (தாட்கோ) சரண்யா மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

அரசின் மீது எதிா்க்கட்சியினா் வீண் பழி: அமைச்சா் சிவசங்கா்

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஊழியரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் வழங்க உத்தரவு

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு: குளத்தூா் வட்டாட்சியா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT