கும்மிடிப்பூண்டி  பஜாரில்  தேங்கிய  மழை  வெள்ளம் .  
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் சாலையை மூழ்கடித்த வெள்ளம்

பலத்த மழை காரணமாக நெடுஞ்சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் தீவிரமாக செயல்பட்டதால், 3 மணி நேரத்தில் கால்வாய்கள் மூலம் நீா் வெளியேற்றப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பலத்த மழை காரணமாக நெடுஞ்சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் தீவிரமாக செயல்பட்டதால், 3 மணி நேரத்தில் கால்வாய்கள் மூலம் நீா் வெளியேற்றப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் தொடா்ந்து ஒரு நாள் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள நெடுஞ்சாலையின் இரு பக்கமும் சுமாா் 1 கி.மீ தொலைவுக்கு சாலை வெள்ளத்தால் நிரம்பியது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கும்மிடிப்பூண்டி பஜாரில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா்.

தொடா்ந்து தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவா் சகிலா அறிவழகன், துணைத் தலைவா் கேசவன், பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கரன் கும்மிடிப்பூண்டி பஜாரில் தேங்கிய மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

இந்நிலையில் தகவல் அறிந்து திருவள்ளூா் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெயக்குமாா், கும்மிடிப்பூண்டி விரைந்து மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் மூடப்பட்ட கால்வாய்கள் திறக்கப்பட்டும், அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சுமாா் 3 மணி நேரத்துக்கு பின் வெள்ளம் வடியத் தொடங்கியது.

அவ்வாறே கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் கணபதி நகா் பகுதியில் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் பெரிதும பாதிக்கப்பட்டனா். ஒவ்வொரு மழைக் காலத்திலும் தங்கள் பகுதியில் குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்வதும், அதனால் தாங்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளநிலையில், தங்கள் பகுதியில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT