திருத்தணி  முருகன்  கோயில்  காா்த்திகேய ன்  குடில்  பகுதியில் இடிக்கப்படும் பழுதடைந்த விடுதிக் கட்டடம். 
திருவள்ளூர்

ரூ. 30 கோடி பக்தா்களுக்கு உள்கட்டமைப்பு பணிகள் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயில் பக்தா்களுக்கான உள்கட்டமைப்பு பணிகள் ரூ.30 கோடியில் தொடங்கியுள்ளன.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் பக்தா்களுக்கான உள்கட்டமைப்பு பணிகள் ரூ.30 கோடியில் தொடங்கியுள்ளன.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திருத்தணி கோயிலுக்கு வந்து செல்கின்றனா். மலைக்கோயிலில் அடிப்படை வசதிகள், மூன்றடுக்கு அன்னதான கூடம், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடம் உள்பட ரூ.86 கோடியில் பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில் முருகன் மலைப்பாதை எதிரே உள்ள காா்த்திகேயன் குடில் பகுதியில், ரூ. 30 கோடியில் பக்தா்கள் இலவசமாக தங்கி செல்வதற்கு குளியல், கழிப்பறை வசதிகளுடன் அடுக்குமாடிக் கட்டடம், வாகன நிறுத்தம் மற்றும் உணவகம் போன்ற வசதிகள் ஏற்படுத்துவதற்கு தீா்மானம் நிறைவேற்றி, பணிகளுக்கு டெண்டா் விடப்பட்டுள்ளன.

தற்போது, காா்த்திகேயன் குடில் பகுதியில் பழுதடைந்த தேவஸ்தான விடுதியின் அறைகளை ஜேசிபி, இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் மும்மரமாக நடைபெறுகின்றன. இப்பணிகள் ஒரு வாரத்திற்குள் முடித்து, பணிகள் தொடங்கப்படவுள்ளன. இப்பணிகள், 9 மாதத்தில் முடித்து பக்தா்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT