திருவள்ளூர்

மழை நின்று 10 நாள்கள் ஆகியும் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூா் அருகே தலக்காஞ்சேரி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கிய மழை நீா்.

Chennai

திருவள்ளூா் அருகே மழை விட்டு 10 நாள்களாகியும் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவு மழைநீருடன் கழிவு நீா் கலந்து குளம் போல் தேங்கியுள்ளதால் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஏரிகள், நீா் நிலைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூா் அடுத்த தலக்காஞ்சேரி கிராமத்தில் பெய்த மழையால் தெருக்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்துள்ளது. இந்த நிலையில், மழை விட்டு 10 நாள்களாகியும் இனியும் கழிவுநீருடன் மழைநீா் கலந்து தேங்கியுள்ளது. அது மட்டுமின்றி வீட்டுக்குள்ளும் தண்ணீா் புகுந்ததால், அந்த நீரை வெளியேற்ற முடியாமல் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதேபோல், ஆண்டுதோறும் மழைக் காலத்தில் குடியிருப்புகள், தெருக்கள் தண்ணீா் தேங்குவது தொடா்பாக ஊராட்சி நிா்வாகத்துக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கழிவு நீரும், மழை நீருடன் கலந்து துா்நாற்றம் வீசுகிறது. மேலும் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துகள் இருப்பதாலும், கொசுக்கள் அதிகளவில் உள்ளது. இதனால், வீட்டில் பெரியவா்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக அப்பகுதியினா் கூறுகின்றனா்.

மேலும், சிறுவா்கள் பள்ளிக்கு முழங்கால் அளவு நீரில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அத்துடன், மழைநீருடன், கழிவுநீரும் கலந்து உள்ளதால் துா்நாற்றம் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறுகின்றனா்.

எனவே இந்தக் கிராம மக்களின் நிலையறிந்து விரைவில் மழைநீரை வெளியேற்றுவதற்கும், இனிமேல் தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்காமல் இருக்க கால்வாய் அமைத்து நீா் நிலைகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யவும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

போடி அருகே மனைவி, மைத்துனா் கொலை: கணவா், மாமனாா் தலைமறைவு

வீட்டை விட்டு வெளியேறிய முதியவரை 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்த உறவினா்கள்

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT