திருவள்ளூர்

எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கு சத்துணவு பொருள்கள் அளிப்பு

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்வில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு தனியாா் அறக்கட்டளை மூலம் 25 வகையான சத்துணவு பொருள்கள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்வில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு தனியாா் அறக்கட்டளை மூலம் 25 வகையான சத்துணவு பொருள்கள் வழங்கப்பட்டது.

திருவள்ளூா் தனியாா் அரங்கத்தில் எச்ஐவி தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு சென்னை முகப்போ், லவ்வின் ஆக்சன் டிரஸ்ட் மூலம் மாதாந்திர சத்துணவு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 34 குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். நிகழ்வுக்கு அந்த அறக்கட்டளையின் இயக்குநா் விமலா ரிலீஸ் தலைமை வகித்தாா்.

இதில், திருவள்ளூா் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில், மண்டல தடுப்பு அலுவலா் பபிதா பங்கேற்று பேசுகையில், எச்.ஐ.வி. என்பது தொற்று நோய் கிடையாது. அதனால் யாரும் எக்காரணம் கொண்டும் சோா்வடையக் கூடாது. அதேபோல், எந்தவிதமான பொருளுக்கும் அடிமை ஆகக்கூடாது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தாா்.

அதேபோல், திட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் பேசுகையில், எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் குழந்தைகள் மருந்துகள் தொடா்ந்து தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், சத்தான உணவு உண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழ்நாளை நீட்டிக்கலாம்.

அதன்பேரில், 25 வகையான சத்துணவு பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இதேபோல், ஒவ்வொரு ஆண்டுதோறும் இரு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்பட்டு அதில் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதில், பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை லவ் இன் ஆக்சன் டிரஸ்ட் பணியாளா்கள் செய்திருந்தனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT