வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 30) கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசார நிகழ்வு நடைபெறும் நிலையில், 100 அடி உயர ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
கவரப்பேட்டையில் எடப்பாடி கே பழனிசாமி தனது 180-ஆவது பிரசார நிகழ்வை மேற்கொள்கிறாா். இதற்காக அதிமுகவினா் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் அனைத்து பகுதிகளில் இருந்து பொதுமக்களை கூட்டத்திற்கு அழைத்து வருகின்றனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறவுள்ள திடலில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 100 அடி உயரத்தில் ராட்சத பலூனை கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மாவட்ட பேரவை செயலாளருமான கே.எஸ்.விஜயகுமாா் பறக்கவிட்டாா்.
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் டி.சி.மகேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா், மேற்கு ஒன்றிய செயலாளா் ஜெ. ரமேஷ் குமாா், மாவட்டத் துணைச் செயலாளா் சியாமளா தன்ராஜ், நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் இமயம் மனோஜ், திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக பாசறை செயலாளா் ஆா்.சேதுபதி பங்கேற்றனா்.