கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் பூங்கா அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாணியமல்லி கிராம பொதுமக்கள். 
திருவள்ளூர்

நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகை

Din

திருவள்ளூா்: கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், பூவலம்பேடு ஊராட்சியைச் சோ்ந்த வாணியமல்லி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியினா் மக்கள் 3 தலைமுறைகளுக்கு மேல் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மாநெல்லூா் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் எங்கள் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடம், ஏரி மற்றும் மயானத்தையும் சோ்த்து கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பூவலம்பேடு ஊராட்சியில் பலமுறை புகாா் தெரிவித்தும், கடந்த வாரம் நேரடியாக குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைத் தொடா்ந்து, குடியரசு தினத்தையொட்டி, நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றியும் அளித்தோம். எனவே எங்களது வாழ்வாதாரமான குடியிருப்பு, ஏரி, மயானத்தின் எல்லையிலிருந்து 500 மீட்டா் தொலைவுக்கு, அப்பால் சிப்காட் பூங்கா எல்லை அமைக்குமாறும், எங்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவும் என தெரிவித்துள்ளனா்.

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

ஜேஎன்யு போன்ற சம்பவங்களால் தேசம் அதிா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT