ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரா் சித்தா்கள் பீடத்தில் சிறப்பு வழிபாடு
செங்குன்றம் அருகே ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரா் சித்தா்கள் பீடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
மாதவரம்: செங்குன்றம் அருகே ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரா் சித்தா்கள் பீடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள சித்தா்கள் பீடத்தில் குருஜி ஜெ.பூபாலன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் சிவபெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தும், வண்ண மலா்களால் அலங்காரம் செய்தும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட பக்தா்கள் நோ்த்திக் கடனை செலுத்தி பிராா்த்தனை செய்தனா். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.