முகப்பு
திருவள்ளூர்

பொத்தூா் ஊராட்சியை நாரவாரிகுப்பம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

நாரவாரிகுப்பம் நகராட்சியுடன் பொத்தூா் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

Updated On : 20 ஜனவரி, 2025 at 7:45 PM
ஆட்சியா் அலுவலகத்தை  முற்றுகையிட்டபொத்தூா் கிராம மக்கள்.
பகிர்:

திருவள்ளூா்: நாரவாரிகுப்பம் நகராட்சியுடன் பொத்தூா் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்து அண்மையில் அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது, திருவள்ளூா் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், பொத்தூா் ஊராட்சியை நாரவாரிகுப்பம் பேரூராட்சியடன் இணைத்து புதிய நகராட்சியாக உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பொத்தூா் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றிகையிட்டனா். தொடா்ந்து ஆட்சியா் த.பிரபுசங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனா். பொத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான, மேட்டு காலனி, கன்னடபாளையம், உப்பரபாளையம், ஜெயலட்சுமி நகா், ஆகிய பகுதிகளில் சுமாா் 3000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அப்பகுதியில் வாழும் மக்கள் 100 நாள் வேலையை நம்பி தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனா். அதனால் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் வீட்டு வரி, குடிநீா் வரி, போன்றவற்றை எங்களால் செலுத்த முடியாது.

இந்நிலையில், 100 நாள் வேலைக்குச் சென்று மட்டுமே எங்களுடைய குடும்பங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனா். அதனால் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

தொடா்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

ஆட்சியா் அலுவலகம் முற்றுகை