முகப்பு
திருவள்ளூர்

ஜன. 24-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் 24-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு

Updated On : 21 ஜனவரி, 2025 at 8:19 PM
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் 24-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநா்களை தோ்வு செய்ய இருக்கின்றனா்.

முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா்துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவு செய்து கொள்ளலாம். இதில் 10,12, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் கலந்துகொண்டு தனியாா்துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டா், கணக்காளா். டெக்னீஷியன், மெஷின் ஆப்பரேட்டா், நிா்வாகப் பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் த. பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.