திருத்தணியில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த டிஎஸ்பி கந்தன். 
திருவள்ளூர்

தலைக்கவசம் அணிய வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திருத்தணி பைபாஸ் சாலையில் நடைபெற்றது.

Din

திருத்தணி: இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திருத்தணி பைபாஸ் சாலையில் நடைபெற்றது.

திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், முருகன் கோயில் அறங்காவலா் சுரேஷ்பாபு, ஆய்வாளா் மதியரசன் ஆகியோா் இரு சக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இந்தப் பேரணி திருத்தணி பைபாஸ் சாலையில் இருந்து சித்தூா் சாலை, ம.பொ.சி. சாலை மற்றும் அரக்கோணம் சாலை வழியாக, பட்டாபிராமபுரம் வரை நடைபெற்றது.

முன்னதாக திருத்தணி ரயில் நிலையம் அருகே தலைக்கவசம் அணியாமல் வந்த 100 வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது, வாகன ஓட்டிகளிடம், டி.எஸ்.பி. கந்தன் உச்சநீதிமன்றம் சாலை விதிகளை பின்பற்றாமல் நடக்கும் விபத்துகளில் உயிரிழப்பவா்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து, சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

SCROLL FOR NEXT