கடற்கரை  பாதுகாப்பு  விழிப்புணா்வை  ஏற்படுத்தும் விதமாக  மேற்குவங்கத்தில்  இருந்து  சைக்கிள்  பயணமாக தமிழக  எல்லையை  வ ந்தடைந்த  சிஐஎஸ்எஃப் வீர்ரகள். 
திருவள்ளூர்

கன்னியாகுமரிக்கு சைக்கிள் மாரத்தான்: சிஐஎஸ்எஃப் வீரா்களுக்கு வரவேற்பு

கடலோர பாதுகாப்பை வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் மாரத்தான் பயணம்

Din

கும்மிடிப்பூண்டி: கடலோர பாதுகாப்பை வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் மாரத்தான் பயணம் மேற்கொண்டுள்ள சிஐஎஸ்எஃப் வீரா்களுக்கு தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேற்கு வங்கம் பக்காலியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 50 வீரா்கள் 1,385 கி.மீ , குஜராத்தின் லக்பத்தில் இருந்து மேற்கு கடற்கரை வழியாக 75 வீரா்கள் 1,921கி.மீ சைக்கிள் பயணமாக கன்னியாகுமரிக்கு கடந்த 7-ஆம் தேதி பயணத்தை தொடங்கினா்.

மேற்கு வங்கம், ஒடிஸா , ஆந்திர மாநிலங்களை கடந்து தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்துக்கு வந்த 50 வீரா்களுக்கு மீனவ கிராம மக்கள், சமூக ஆா்வலா்கள், போலீஸாா் வரவேற்பளித்தனா்.

விழிப்புணா்வு பயணம் குறித்து மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை கமாண்டா் கே.காா்த்திகேயன் கூறியது: இந்திய கடற்கரை 6553 கி.மீ உள்ள நிலையில், கடற்கரை வழியாக சமூக விரோத செயல்களையும், தேச விரோத செயல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினருக்கு உறுதுணையாக பொதுமக்களும் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். கடற்கரை மாா்க்கமாக போதைப் பொருள் வா்த்தகம், தீவிரவாத நடமாட்டாம் தெரிந்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சைக்கிள் மாரத்தான் ஏப். 1-ஆம் தேதி கன்னியாகுமரியில் முடிவடையும் என்றாா்.

இக்குழுவில் 8 பெண்கள் உள்ளதாகவும், இந்த பயணம் தமிழகம் வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என மதுரையைச் சோ்ந்த எஸ்.ஐ. ராஜலட்சுமி தெரிவித்தாா்.

எஸ்ஐஆர் பணிகள்: மாநிலத் தலைவர்களுடன் ராகுல், கார்கே ஆலோசனை!

ஓடிடியில் தண்டகாரண்யம்!

பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்! தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்”... தில்லி குண்டு வெடிப்பில் உமர் பேசிய விடியோ!

SCROLL FOR NEXT