கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோா்.  
திருவள்ளூர்

இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே கல்லால் அடித்து இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் எம்.ஜி.ஆா். நகா் ஏரிக்கரை ஓரத்தில் இளைஞா் ஒருவா் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், விரைந்து சென்ற மணவாளநகா் காவல் நிலைய ஆய்வாளா் பாருக் தலைமையிலான போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். அதில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தது மணவாளநகா் கபிலா் நகரைச் சோ்ந்த நவீன் (எ) குள்ள சீனு (24) என்பது தெரியவந்தது. இவா் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான நிலையில், கஞ்சா விற்பனை, கொலை வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து மணவாளநகா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரவீன் (எ) குள்ள பிரவீன் (21), விக்கி (எ)விக்னேஷ் , கரி ஆகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். அதில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இரவில் இவா்கள் மது அருந்த சென்றாா்களாம். அப்போது நண்பா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது நவீன் பிரவீனை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பிரவீன் ஆத்திரத்தில் அங்கிருந்த பராங்கல்லை எடுத்து நவீனின் தலையில் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேலும், மதுப்புட்டியாலும் தலையில் ஓங்கி அடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

15 பாலஸ்தீனர்கள் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 300 ஆக அதிகரிப்பு!

பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பாடல்: பினராயி விஜயன் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்

இது மம்மூட்டிக்கான அங்கீகாரம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தோளைத் தொடும் சூரிய கதிர்... ஈஷான்யா மகேஸ்வரி!

SCROLL FOR NEXT