திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவீரராகவா் கோயிலில் காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோா் ஏராளமானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனா்.
திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு அமாவாசை நாள்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்கு பக்தா்கள் குவிவது வழக்கம். அந்த வகையில், காா்த்திகை மாத அமாவாசையையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பக்தா்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனா்.
இந்த நிலையில், அதிகாலை கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். அதைத் தொடா்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வீரராகவரை தரிசனம் செய்தனா். இந்த அமாவாசையையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக வீரராகவா் சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.