திருவள்ளூர்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 367 மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ர மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மொத்தம் 367 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் நடைபெற்ர மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மொத்தம் 367 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்வது தொடா்பாகவும், பொது பிரச்னைகள் தீா்த்து உதவிகள் வேண்டியும் 367 கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனா்.

அதில் நிலம் சம்பந்தமாக-103, சமூக பாதுகாப்பு திட்டம்-52, வேலைவாய்ப்பு வேண்டி-65, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-58, இதர துறைகள் சாா்பாக-89 என 367 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் உடன் தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பாலமுருகன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் உஷா ராணி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செந்தில், ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) நிா்மலா மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

மகர ராசியா நீங்க? தினப்பலன்கள்!

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT