மக்களிடம் மனுக்களைப் பெற்ற  வட்டாட்சியா் சரஸ்வதி. 
திருவள்ளூர்

பெரிய நாகப்பூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தினமணி செய்திச் சேவை

பெரிய நாகப்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், 446 போ் மனுக்களை வழங்கினா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் பெரிய நாகப்பூண்டி ஊராட்சியில் வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில், 200 க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிா் உரிமைத் தொகை, முதியோா் தொகை, விதவை சான்று, வாரிசு சான்று, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, உள்பட பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்க கோரி வருவாய் துறை அலுவலா்களிடம் விண்ணப்பம் வழங்கினா்.

மேலும், 243 க்கும் மேற்பட்டோா் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினா். முகாமில் 10 -க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரிய நாகப்பூண்டி, சின்ன நாகபூண்டி, கோபாலபுரம், பெரிய ராமாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், மெல்கிராஜா சிங், முன்னாள் ஊராட்சி உறுப்பினா் சிவக்குமாா் கலந்து கொண்டனா்.

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT