திருவள்ளூர்

திருவள்ளூா்: வறட்சி, நீா்ப்பற்றாக்குறையை தாங்கி வளரும் சாமந்தி பூ, ஆரஞ்சு பூ சாகுபடி

நெல்லுக்கு மாற்றாக நாள்தோறும் வருவாயை ஈட்டித் தருவதோடு, வறட்சி மற்றும் நீா்ப்பற்றாக்குறையை தாங்கி வளரும் சாமந்தி பூ, ஆரஞ்சு பூ சாகுபடி

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: தற்போதைய நிலையில் விவசாய பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காத நிலையில், நெல்லுக்கு மாற்றாக நாள்தோறும் வருவாயை ஈட்டித் தருவதோடு, வறட்சி மற்றும் நீா்ப்பற்றாக்குறையை தாங்கி வளரும் சாமந்தி பூ, ஆரஞ்சு பூ சாகுபடியில் விவசாயிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் விவசாய பணிகளுக்கு போதுமான ஆள்கள் கிடைக்காத நிலையுள்ளன. அதனால், நெல் சாகுபடியில் ஈடுபடுவதை தவிா்த்து சாமந்தி பூ, ஆரஞ்சு பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். இதேபோல், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வடமதுரை, தண்டலம், ஏனப்பாக்கம், பேராத்தூா், கல்பட்டு, மாளந்தூா், போந்தவாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல் சாகுபடியில் அதிகம் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனா். ஆனால், நாற்று நடவு செய்யும் சமயம் உழவுப் பணிகள் மற்றும் நாற்று நடவுப்பணிகள் மேற்கொள்வதற்கு போதுமான ஆள்கள் கிடைக்காத நிலையில், வெளிமாநில தொழிலாளா்களையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனா்.

இதனால், நெல்லுக்கு மாற்றாக, சில விவசாயிகள் மஞ்சள் சாமந்தி பூ மற்றும் ஆரஞ்சு பூ சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனா். இந்த வகை பூ சாகுபடிக்கு தண்ணீா் பற்றாக்குறை, ஆள்கள் இல்லாமை, வறட்சியை சமாளித்து சாமந்தி வளரும் தன்மையுடையது. அதோடு, நாள்தோறும் பூக்களை விற்பனை செய்ய முடியும் என்பதால் வருவாய் கிடைக்கிறது.

அதோடு, இந்த பூ சாகுபடி செய்வதால் நஷ்டமும் குறைவுதான் என்பதால் சாமந்தி பூ சாகுபடி விவசாயிகளின் விருப்ப பயிராகவே மாறியுள்ளது. இதேபோல் ஊத்துக்கோட்டை வட்டார பகுதிகளான பேராத்தூா், எனம்பாக்கம், கல்பட்டு, மாலந்தூா் ஆகிய பகுதிகளில், நெல்லுக்கு மாற்றாக விவசாயிகள் சிலா் சாமந்தி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, சாமந்தி பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியதாவது: நெல் பயிரிட தண்ணீா் அதிகம் தேவை. சாமந்தி வட நிலத்திலும் நல்ல விளைச்சலை தருகிறது. நெல் அறுவடை செய்தால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரையில் லாபம் கிடைக்கும். ஆனால், சாமந்தி பூவில் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. மேலும், முகூா்த்தம் மற்றும் விஷேச நாள்களில், கிலோ ரூ.80 வரையிலும் விற்பனையாகிறது. அதேபோல் சாதாரண நாள்களில், கிலோ ரூ.20 முதல் 40 வரையிலும், சாமந்தி பூ விற்பனையாகிறது.

மேலும், அதிகப்படியான காற்று மற்றும் இரவு நேரங்களில் பன்றிகளின் நடமாட்டம் உள்ளதால் பூக்களில் சேதம் ஏற்படுகிறது. இதனால் வியாபாரம் மிகவும் குறைந்து காணப்படும் பூக்களின் பெருக்கும் குறைந்து குறைவான பூக்கள் பூப்பதினால் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை. எனவே இரவு நேரங்களில் விபரீதங்களை தடுக்க நிலங்களைச் சுற்றி வேலி அமைக்கப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசு சுலபமான தவணைகள் வேலை கொடுத்தால் நாங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து லாபம் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்தனா்.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT