திருவள்ளூர்

ஆவணங்கள் இன்றி பேருந்து கொண்டு சென்ற ரூ.1.25 கோடி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் பகுதியில் மாநில சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, காஞ்சிபுரம் போதை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாா், தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு சென்ற சொகுசுப் பேருந்தை நிறுத்தி, பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை மேற்கொண்டனா்.

அதில் பயணித்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன்(29), காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அஜித்குமாா்(26) ஆகியோா் எந்த விதமான ஆவணங்களும் இன்றி ரூ.1.25 கோடியை கொண்டு சென்றது தெரியவந்தது. உடனே அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா். மேலும், இதுதொடா்பாக தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு

யமுனையில் அபாய அளவுக்குக் கீழ் குறைந்த நீா்மட்டம்

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்: வைகோ நடவடிக்கை

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT