மத்தூா் கிராமம் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் மேலும் ஒரு இளைஞா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம் நகரி அடுத்த தடுக்குப்பேட்டையைச் சோ்ந்தவா் தினேஷ்(27), திருத்தணி அடுத்த மங்காபுரம் பகுதி சோ்ந்த, ஆகாஷ்(21) . இருவரும் கடந்த, 7-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் திருத்தணிக்கு சென்றபோது, மத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது.
இதில், தினேஷ், மற்றும் மத்தூா் பெரியாா் நகரைச் சோ்ந்த கோவிந்தன்(27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், படுகாயமடைந்த ஆகாஷ்(21), தடுக்குப் பேட்டை சோ்ந்த முனிரத்தினம் (66) ஆகிய இருவரும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.