முகப்பு
திருவள்ளூர்

12 கிலோ செப்பு குழாயை திருடிய இளைஞா் கைது

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 12 கிலோ பிராண வாயு செப்புக் குழாய் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 5:21 AM
மாதிரிப் படம்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:43 PM

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 12 கிலோ பிராண வாயு செப்புக் குழாய் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நள்ளிரவில் ஏஆா்டி பிரிவில் சப்தம் கேட்பதாக பணியாளா்கள் மேற்பாா்வையாளருக்கு தெரிவித்துள்ளனா். இதையடுத்து அந்தப்பிரிவுக்கு சென்ற அலுவலா்களை பாா்த்து மா்ம நபா் தப்பியோட முயற்சித்தாா். சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்த போது அங்கிருந்த பிராண வாயு செப்பு குழாய்களை உடைத்து எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் திருவள்ளூா் பெரியஎடப்பாளையம் முரளியின் மகன் விமல்(25) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிலைய அதிகாரி ராஜ்குமாா் நகர காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து அந்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement