திருவள்ளூர்

தைப்பூச விழா: பொன்னேரி பகுதி முருகன் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

தைப்பூச விழாவையொட்டி, பொன்னேரி பகுதியில் உள்ள சிவாலயம் மற்றும் முருகா் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி: தைப்பூச விழாவையொட்டி, பொன்னேரி பகுதியில் உள்ள சிவாலயம் மற்றும் முருகா் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தைப்பூசத்தையொட்டி, பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெற்றிவேல் முருகன், ஆண்டாா்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி, பெரும்பேடு, பெருஞ்சேரி கிராமங்களில் உள்ள முத்துக்குமாரசுவாமி கோயில்களில் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

காலை முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனா்.

இதே போன்று வள்ளலாரின் தாயாா் பிறந்த கிராமமான சின்னக்காவனம் பகுதியில் உள்ள சின்னம்மையாா் இல்லத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மதியம் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இரவு ஜோதி தரிசனம் நடைபெற்றது.

இதே போன்று பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி தாயாா் வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு அா்ச்சனை நடைபெற்றது.

மேலும், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அருட்பிரகாச வள்ளலாா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி விவரம்!

பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

SCROLL FOR NEXT