மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப், உடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் குமாா் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்: ஆட்சியா் வழங்கினாா்

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மொத்தம் 387 கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 12 பேருக்கு தலா ரூ.12,000 வீதம் மொத்தம் ரூ1.44 லட்சத்தில் இயற்கை உபாதை கழிக்கும் வகையில் வடிவமைத்த சக்கர நாற்காலிகளையும் அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முகபிரீத்தா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் குமாா் பங்கேற்றனா்.

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி விவரம்!

பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

SCROLL FOR NEXT