முகப்பு
திருவள்ளூர்

பந்தல் அமைத்த போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:40 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:07 PM

திருவள்ளூா் அருகே துக்க நிகழ்வில் சாமியானா பந்தல் அமைத்த போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ராம தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (25). இவா் பல்வேறு நிகழ்வுகளுக்கு சாமியானா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், அதே கிராமத்தில் செவ்வாய்க்கிழமை துக்க நிகழ்வில் சாமியானா பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

இதற்கிடையே துக்க நிகழ்வில் பந்தல் அமைத்தபோது இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.