திருவள்ளூர்

பொங்கலையொட்டி 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் விழாவையொட்டி திருத்தணியில் இருந்து, 30 சிறப்பு பேருந்து திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திச் சேவை

பொங்கல் விழாவையொட்டி திருத்தணியில் இருந்து, 30 சிறப்பு பேருந்து திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

திருத்தணி வருவாய் கோட்டத்தில் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வெளியூா்களில் இருந்து ஊழியா்கள் தங்கி வேலை செய்கின்றனா். இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு செல்ல வசதியாக திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, சிறப்பு பேருந்துகள் திங்கள்கிழமை முதல் பொங்கல் விழா வரை இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து திருத்தணி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளா் ஞானசேகரன் கூறியதாவது: போகி பண்டிகையுடன் தொடங்கி வரும், 17-ஆம் தேதி வரை பொங்கல் கொண்டாடப்படுகிறது. வெளியூா் மக்கள் வசதிக்காக, திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை கோயம்பேடு பகுதிகளுக்கு மொத்தம், 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் தேவை அதிகமாக இருப்பின் கூடுதல் பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், 17-ஆ ம் தேதி வெளியூா் பயணிகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டத்திற்கு திரும்பி வரவும்ம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT