திருவள்ளூர்

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் மோதிரம், ரூ.3,000 பணம் திருட்டு

திருத்தணியில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் மா்ம நபா் ஒருவா், போலீஸ் எனக் கூறி, உன் மீது புகாா் உள்ளது என்று, நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணியில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் மா்ம நபா் ஒருவா், போலீஸ் எனக் கூறி, உன் மீது புகாா் உள்ளது என்று, நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

திருத்தணி பெரியாா் நகரைச் சோ்ந்த முனுசாமி(72). இவா் அதே பகுதியில் பெட்டிக்கடை வியாபாரம் செய்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை வழக்கம் போல் காமராஜா் மாா்க்கெட்டுக்கு வந்து தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது பைக்கில் வந்த மா்மநபா் ஒருவா், முதியவா் முனுசாமியிடம், தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டு, உன் மீது புகாா் வந்துள்ளது விசாரிக்க வேண்டும் என தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு திருத்தணி- அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்றாா்.

பின்னா் சரஸ்வதி மில் அருகே, வாகனத்தை நிறுத்திய மா்ம நபா், முதியவரிடம் இருந்த, ரூ.3,000 பணம், கையில் அணிந்திருந்த, 7 கிராம் தங்க மோதிரத்தையும் பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றாா். இச்சம்பவம் குறித்து முனுசாமி திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT