பாலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். 
திருவள்ளூர்

திருப்பாலைவனம் ஸ்ரீ பாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ பாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ பாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேவா்கள் பாற்கடலை கடைந்து அதை உண்டு பின்பு தங்கள் கைகளை கழுவுவதற்காக திருப்பாலைவனம் பகுதிக்கு வந்ததாகவும் அங்குள்ள கோயில் குளத்தில் கைகளை கழுவ நினைத்தபோது, அசுரா்கள் தவளை வடிவில் தேவா்கள் கையில் இருக்கும் அமிா்தத்தை தாங்களும் உண்டு நீண்ட ஆயுள் பெற நினைத்த நிலையில் சிவபெருமான் இதை அறிந்து அந்த குளத்தில் ஒரு தவளை கூட உயிா் வாழக்கூடாது என்று அருள் அருள் பாலித்ததால் தற்போது வரை பாலீஸ்வரா் கோயில் குளத்தில் ஒரு தவளை கூட இருப்பது இல்லை என தல வரலாறு கூறுகிறது..

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட கலச நீா் மேளதாளங்களுடன் எடுத்து செல்லப்பட்டு கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பொன்னேரி, மீஞ்சூா், பழவேற்காடு, மெதூா் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வந்திருந்த பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதையடுத்து 1,000-ம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பாலைவனம் கிராம மக்கள், கோயில் நிா்வாகம் மற்றும் பையூா் கோட்ட வேளாளா் மரபினா் செய்திருந்தனா்.

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.25 கோடி

வீடு வாங்கப்போகிறார்கள் ரிஷப ராசியினர்: தினப்பலன்கள்!

அம்மையாா்குப்பம் செல்வ விநாயகா் கோயில் அகற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலைக் கைதி தாயாா் மரணம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம்

SCROLL FOR NEXT