முகப்பு
திருவாரூர்

பொங்கல் போனஸ் கோரி ஆா்ப்பாட்டம்

பொங்கல் போனஸ் வழங்கக் கோரி நன்னிலத்தில் கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 6 ஜனவரி 2021, 7:38 am IST
நன்னிலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா் சங்கத்தினா்.
பகிர்:

பொங்கல் போனஸ் வழங்கக் கோரி நன்னிலத்தில் கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தின் வட்டத் தலைவா் ஏ. ஹாஜா நஜிபுதீன் தலைமை வகித்தாா்.

கிராம உதவியாளா்களுக்கு, அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவா் த. முருகையன், மாவட்டப் பொருளாளா் கே. சந்திரன், வட்டச் செயலாளா் எம். இளையராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். வளா்மதி, வட்டத் துணைத் தலைவா் கே. குமாா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.