தொழில் மலர் - 2019

உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த உதவும் இணைய தளம்

DIN

உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு தனி இணையதளம் தேசிய சிறு தொழில் கழகத்தால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஒரு பொருளை உற்பத்தி செய்துவிட்டு அதை விற்பனை செய்வது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய சவாலானது. சந்தைப்படுத்துவதற்காக விளம்பரங்கள், இலவசங்கள், சலுகைகள் என பல முயற்சிகளுக்குப் பிறகுதான் சந்தைப்படுத்தப்படுகிறது. பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரையில் அது அவர்களுக்கு சாத்தியமாகிவிடும். ஆனால் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்துவதும், விளம்பரப்படுத்துவதும் மிகப்பெரிய சவாலாகும்.
இதைக் கருத்தில் கொண்டு தேசிய சிறுதொழில் கழகம் பொருள்களை சந்தைப்படுத்துவதற்காக தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. மேலும், தேசிய சிறு தொழில் கழகத்தில் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் ஏல அறிவிப்புகள், அதற்கான படிவங்களை வழங்குகிறது. அதே போல மூலப்பொருள்களையும் குறைந்த விலையில் தொழில் முனைவோருக்கு வாங்கித் தரும் பணியையும் தேசிய சிறு தொழில் கழகம் மேற்கொண்டு வருகிறது. விற்பனையாளர்-கொள்முதல் செய்பவர்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
தொழில்நுட்ப உதவிகள், குறைந்த வட்டியில் கடனுதவி, தொழில்நுட்ப உதவிக்கான ஆலோசனைகளை தேசிய சிறுதொழில் கழகம் வழங்குகிறது. அதோடு உற்பத்தி செய்த பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இலவசமாகப் பதிவு செய்து சந்தைப்படுத்தும் திட்டமும் உள்ளது. குறைந்த கட்டணத்தில் பதிவு செய்து சந்தைப்படுத்தும் திட்டமும் உள்ளது. 
மேலும் விவரங்களுக்கு: http://msmemart.com, https://nsic.co.in/.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT