தொழில் மலர் - 2019

இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

DIN

பொருளாதார வசதி இல்லாத இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக ஆக விரும்பினால், அவர்களுக்கு கைகொடுக்க தயாராக இருக்கிறது பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP-Prime Minister's Employment Generation Programme).

இத்திட்டம் தொழில்களை தொடங்குவதற்கான முதலீட்டை பெற உதவுகிறது. 

திட்டத்தின் நோக்கம்: தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பாரம்பரிய தொழில்முனைவோர், கிராமப்புற / நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தருதல் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்தல்; தொடர்ந்து, நிரந்தரமாக வேலை வழங்குவதன் மூலம், வேலை இல்லா இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்கு குடி பெயர்வதைத் தடுத்தல் இதன் இதர நோக்கங்களாகும்.
திட்ட மதிப்பு: உற்பத்தி சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ. 25 லட்சத்திற்குள் இருக்கும்பட்சத்திலும், சேவை சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ. 10 லட்சத்திற்குள் இருக்கும்பட்சத்திலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

அரசு மூலதன மானியம்: பொதுப்பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25 சதவீதம் மானியமாக பெறலாம். நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 15 சதவீதம் மானியமாக பெறலாம்.

ஆதி திராவிடர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் ராணுவத்தினர் / உடல் ஊனமுற்றோர்/ பெண்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 35 சதவீதமும், நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25 சதவீதமும் மானியமாக பெறலாம்.

சொந்த முதலீடு: பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5 சதவீதமும் சொந்த முதலீடு இருக்க வேண்டும்.

வயது மற்றும் வருமான வரம்பு: 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை, வருமான வரம்பும் இல்லை. 

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள்: பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்கள் வங்கிகள் அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION) மூலமாக கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.

படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள், கதர் கிராம தொழில் வாரியம் ஆகியவற்றை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 
www.kvic.org.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT