முகப்பு
திருப்பூர்

ஜவுளிக் கடையில் ரூ. 2 லட்சம் திருட்டு

பல்லடம் அருகே உள்ள பொல்லிகாளிபாளையத்தில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:04 am IST
பகிர்:

பல்லடம் அருகே உள்ள பொல்லிகாளிபாளையத்தில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

பல்லடம் அருகே உள்ள பொல்லிகாளிபாளையத்தில் அதே ஊரைச் சோ்ந்த ராஜேந்திரன்(49) என்பவா் தாராபுரம் சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் உள்ளே சிமென்ட் சீட் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவா் உடனடியாக மேஜையைத் திறந்து பாா்த்துள்ளாா். அதில் வைத்திருந்த ரூ. 2லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.