முகப்பு
இன்றைய நிகழ்ச்சிகள்

மதுபானக்கடைகளை அகற்றக் கோரி கவுன்சிலர்கள் உதவிஆட்சியரிடம் மனு!

சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றக் கோரி நகரமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை உதவி ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றக் கோரி நகரமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை உதவி ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினர்.

சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள லால்கான்தெரு, மேலவீதி பஸ்நிறுத்தம், திருவள்ளுவர் தெரு, கொத்தவால்தெரு காய்கறி மார்க்கெட், பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மூத்த நகரமன்ற உறுப்பினர்கள் ஆ.ரமேஷ், திமுக நகரமன்ற கொறடா த.ஜேம்ஸ்விஜயராகவன் ஆகியோர் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் உதவிஆட்சியரை எம்.அரவிந்திடம் மனு அளித்து வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.சி.மணிகண்டன், அப்புசந்திரசேகரன், கோ.நடராஜன், சி.க.ராஜன் (திமுக), எல்.சீனுவாசன் (மதிமுக), முகமதுஜியாவுதீன் (காங்கிரஸ்), ஜி.செல்வராஜ் (மூவேந்தர் முன்னேற்றக்கழகம்), பெரு.திருவரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் தெரிவித்து மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தெரிவித்தார்.

அகற்றப்படாவிடில் கடைகள் முன்பு மறியல்: பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மேற்கண்ட டாஸ்மாக் கடைகளை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றாவிடில் விரைவில் கடைகள் முன்பு நகரமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.