இந்திய நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு அழைப்பு
புது தில்லி, ஆக. 2: சிங்கப்பூரில் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆசியா-பசிஃபிக் பகுதி நாடுகளுக்கான சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச இயக்
புது தில்லி, ஆக. 2: சிங்கப்பூரில் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆசியா-பசிஃபிக் பகுதி நாடுகளுக்கான சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச இயக்குநர் லீ எங் கீட் புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது இந்திய நிறுவனங்களை சிங்கப்பூரில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார். குறிப்பாக, உயிரி-மருத்துவ இயலைச் சார்ந்த தொழில்கள், உள்கட்டுமானத் தொழில்கள் ஆகியவற்றுக்கு சிங்கப்பூரில் நல்ல வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: 2005-ல் இந்திய முதலீடுகளின் அளவு வெறும் ரூ. 6 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் 2010-ம் ஆண்டில் சிங்கப்பூரில் இந்திய நிறுவனங்கள் செய்த முதலீட்டின் அளவு சுமார் ரூ. 1 லட்சம் கோடியாக அதிகரித்தது.
Advertisement
சிங்கப்பூரில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து ஒத்துழைப்பும் தரும். தொழில்களுக்கான வரி விகிதச் சூழலும் சாதகமாகவே இருக்கிறது.
நிறுவனங்களின் மூலதன லாபத்துக்கு வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. நிறுவன வரி விதிப்பு 17 சதவீதம்தான். சேவை அளிப்புக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.
உயிரி மருத்துவ இயல், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, இயற்கை வளம், சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவிலிருந்து அதிக அளவில் முதலீடு செய்யவேண்டுமென்று சிங்கப்பூர் விரும்புகிறது. டாடா கன்ஸல்டன்ஸி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், டாடா தொழில்நுட்பம், எச்.ஸி.எல்., எல் & டி இன்ஃபோடெக், பிடிலைட் ஆகிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் ஏற்கெனவே மிக அதிக அளவில் முதலீடு செய்துள்ளன என அவர் தெரிவித்தார்.