முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் எழுச்சியான வாரம்

புத்தாண்டின் முதல் வாரம் மும்பை பங்குச் சந்தையில் எழுச்சிமிக்கதாக இருந்தது. சென்செக்ஸ் குறியீட்டளவு 339 புள்ளிகள் உயர்ந்து, 19,784 என்ற அளவில் வார இறுதியில் நிலைத்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 10:14 AM
பகிர்:

புத்தாண்டின் முதல் வாரம் மும்பை பங்குச் சந்தையில் எழுச்சிமிக்கதாக இருந்தது. சென்செக்ஸ் குறியீட்டளவு 339 புள்ளிகள் உயர்ந்து, 19,784 என்ற அளவில் வார இறுதியில் நிலைத்தது.

மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் தொடர்ந்து இரண்டு வாரங்களாக காளையின் பிடியில் இருந்து வருகிறது. அமெரிக்க பட்ஜெட்டில் திருத்த மசோதாவின் வெற்றியும் இந்திய சேவைத் துறை மற்றும் தயாரிப்புத் துறையின் வளர்ச்சியும் முதலீட்டாளர்கள் இடையே சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தின. எச்சரிக்கை உணர்வுடன் வாரத் தொடக்கத்தில் பங்கு வர்த்தகம் இருந்தபோதிலும் அதன் பின்னர், முன்னேற்றப் பாதையில் தொடர்ந்தது.

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடைய பங்குகளின் விற்பனை லாபம் பெறவில்லை. ஏனைய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபத்தில் விற்பனை ஆகின.

ஒட்டுமொத்தமாக இத்துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏறத்தாழ ஒரு சதவீதம் முதல் 5 சதவீதம் வரை லாபம் அடைந்தன. வீட்டுவசதி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.

தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் 107 புள்ளிகள் உயர்ந்து, குறியீட்டளவான நிஃப்டி 6,000 புள்ளிகள் என்ற அளவைக் கடந்தது. வார இறுதியில் நிஃப்டி 6,016 புள்ளிகள் என்ற அளவில் நிலைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →