பேருந்து, டிரக்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் "எண்டியூமைல் எல்.ஹெச்.டி.' உள்பட மூன்று புதிய வகை டயர்களை அப்போலோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வகை டயர்களை அறிமுகப்படுத்தி அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவுக்கான தலைவர் சதீஷ் சர்மா பேசியது: "அப்போலோ எண்டியூமைல் எல்.ஹெச்.டி.', "எண்டியூரேஸ் ஆர்.டி ஹெச்.டி.', "எண்டியூ கம்ஃபர்ட் சி.ஏ.' ஆகிய மூன்று வகை டயர்களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த டயர்கள் சென்னையில் உள்ள எங்களது ஆராய்ச்சி மையத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் "எண்டியூமைல் ஹெச்.டி.வகை' டயர்கள் மிக நீண்ட தூரம் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பயன்படுத்தலாம். இதில் உள்ள "வெண்டிலேட்டட்' வடிவமைப்பு, வாகனம் இயங்கும்போது டயரில் ஏற்படக் கூடிய வெப்பத்தைக் குறைக்கும். பிற டயர்களைவிட 20% வரை கூடுதல் பயன்பாடு உள்ளது இந்த டயர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.