வணிகம்

நவம்பரில் ரூ.80,808 கோடியாக குறைந்தது ஜிஎஸ்டி வசூல்

கடந்த நவம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.80,808 கோடியாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி

கடந்த நவம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.80,808 கோடியாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 திங்கள்கிழமை (டிச. 25) நிலவரப்படி, கடந்த நவம்பர் மாதத்துக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.80,808 கோடியாக உள்ளது.
 அந்த மாதத்தில் மட்டும் ரூ.53.06 லட்சம் கோடிக்கான வருவாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
 நவம்பரில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியான ரூ.80,808 கோடியில், ரூ.7,798 கோடி ரூபாய் மாநிலங்களுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
 அது தவிர, ரூ.13,089 கோடி மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.18,650 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும், ரூ.41,270 கோடி ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஜூலை மாதம் ரூ.95,000 கோடியாகவும், ஆகஸ்ட் மாதம் ரூ.91,000 கோடியாகவும் இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் ரூ92,150 கோடியாக உயர்ந்தது.
 எனினும், அது கடந்த அக்டேபர் மாதம் ரூ.83,000 கோடியாகக் குறைந்து, தற்போது நவம்பர் மாதத்தில் மேலும் ரூ.80,808 கோடியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT