முகப்பு
வணிகம்

'மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க தகவல் பாதுகாப்பு முக்கியம்'

மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க தகவல் பாதுகாப்பு மிக முக்கியம் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:35 AM
பகிர்:

மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க தகவல் பாதுகாப்பு மிக முக்கியம் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கிரண் வஷிரெட்டி தெரிவித்ததாவது:
இந்தியாவில் மின்னணு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் அதுகுறித்த தகவல்களை இந்தியாவுக்குள் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் பணப்பரிமாற்ற விவரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை செயல்படுத்த, நிறுவனங்களுக்கு ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையால், வாடிக்கையாளர்களின் தரவுகளை இனி யாரும் வணிக ரீதியில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பணப்பட்டுவாடா முறை பாதுகாப்புக்கு இது முக்கியமானது என்றார் அவர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →