முகப்பு
வணிகம்

ஹிந்துஸ்தான் ஸிங்க் லாபம் ரூ.1,815 கோடியாக சரிவு

வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் ரூ.1,815 கோடியாக சரிவடைந்துள்ளது.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:32 AM
பகிர்:


வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் ரூ.1,815 கோடியாக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.5,779 கோடியாக காணப்பட்ட நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பாண்டின் இதே கால அளவில் ரூ.5,171 கோடியாக சரிந்துள்ளது. அதேசமயம், செலவினம் ரூ.2,694 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,897 கோடியாகி உள்ளது. 
வருவாய் குறைவு மற்றும் செலவின அதிகரிப்பின் காரணமாக நிறுவனத்தின் நிகர லாபம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.1,815 கோடியாக சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.2,584 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 29.7 சதவீதம் குறைவாகும்.
நிறுவனத்தின் இயக்குநர் குழு சிறப்பு இடைக்கால ஈவுத் தொகையாக 1000 சதவீதம் அதாவது ரூ. 2 முகமதிப்புடைய பங்கு ஒன்றுக்கு ரூ.20 வழங்க முடிவெடுத்துள்ளது என ஹிந்துஸ்தான் ஸிங்க் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.