முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.2,40,00 சம்பளத்தில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

என்டிபிசி நிறுவனத்தின் துணை நிறுவனம் கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

ரூ.2,40,00 சம்பளத்தில் மேலாளர் பணி - என்டிபிசி
பகிர்:

கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

என்டிபிசி நிறுவனத்தின் துணை நிறுவனம் கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனம் நாட்டின் வளர்ச்சி சவால்களுக்கு ஏற்ப, 2032-க்குள் மொத்தமாக 60 ஜிகாவாட் நிறுவப்பட்ட திறனை அடையும் ஒரு லட்சியத்துடன் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் தற்போது, துணை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 01/26

பணி: Deputy General Manager

காலியிடங்கள்:14

சம்பளம்: மாதம் ரூ. 90,000 - 2,40,000

வயதுவரம்பு: 44-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electrical & Electronics, Instrumentation & Control, Civil, Mechanical, Electronics & Tele-communication ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்து 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager

காலியிடங்கள்:28

சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electrical & Electronics, Instrumentation & Control, Civil, Mechanical, Electronics & Tele-communication ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy General Manager(Finance)

காலியிடங்கள்:2

சம்பளம்: மாதம் ரூ. 90,000 - 2,40,000

தகுதி: சிஏ, சிஎம்ஏ முடித்து 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 44-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(Finance)

காலியிடங்கள்:2

சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000

தகுதி: சிஏ, சிஎம்ஏ முடித்து 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ngel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.5.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

The NTPC Green Energy Ltd has released its latest official recruitment notification to fill the 46 Deputy General Manager....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.