அமெரிக்க கார் நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், போக்குவரத்தை சமாளிக்க நிலநடுக்க தடுப்புச் சுரங்கங்களை அமைக்க திட்டமிட்டு ட்விட்டரில் கருத்துக்கணிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரை பின்தொடர்பவர்களில் 66% பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உலகளவில் வளர்ந்து வரும் போக்குவரத்து பிரச்னைகளை சமாளிக்க பல நிலை சுரங்கப்பாதை அமைப்பது அவசியமாக இருக்கிறது என்று எலான் கூறுகிறார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், 'பல்வேறு நாடுகளில் போக்குவரத்து என்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது. அது மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டியுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. எனவே இதற்கு பலநிலை சுரங்கங்கள் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நகரங்களின் முக்கியப் பகுதிகளில் பூகம்ப-தடுப்புச் சுரங்கங்களை உருவாக்குங்கள்' என்று வலியுறுத்தியுள்ளார்.
அவரை பின்தொடர்பவர் ஒருவர் இதுகுறித்து, 'சுரங்கப்பாதைகள் ஒரு நிலை அல்லது இரண்டு நிலைகள் வரை மட்டுமே செல்கின்றன. அதேசமயம் சுரங்கப்பாதைகள் அமைக்கும் இடம் வரம்பற்ற இடம் என்பதால் சிறந்த உள்கட்டமைப்பு அவசியம்' என்று தெரிவித்தார்.
இவ்வாறு பலரும் நிலநடுக்க தடுப்புச் சுரங்கம் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
எலான் தலைமையிலான போரிங் நிறுவனம், லாஸ் வேகாஸ் கன்வென்ஷன் சென்டரில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமானத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.