வணிகம்

2023-ல் ரூ.11 ஆயிரம் கோடி வர்த்தகத்தை நோக்கி ஆன்லைன் கேம்ஸ்!

DIN

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக தற்போது அனைத்து சேவைகளும் ஸ்மார்ட்ஃபோன்களில் வழியாக உள்ளங்கையில் அடங்கிவிட்டது. இக்காலத்தில் அனைவரின் அன்றாட பயன்பாட்டுப் பொருளாக மாறியுள்ள ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம், ஒவ்வொருவரின் தேவைகளையும் ஏதேனும் ஒருவகையில் பூர்த்தி செய்து வருகிறது.

அலுவல், வணிகம் மற்றும் பொழுதுபோக்கு என பலவகைகளில் இவை பயன்படுத்தப்படுகிறது. அதிலும் ஸ்மார்ட்ஃபோன்களின் வரவுக்குப் பின்னர் பெரும்பாலானோர் தற்போது ஆன்லைன் கேம்ஸ்களுக்கு பெரும் ரசிகர்களாகியுள்ளனர்.

இந்நிலையில், நாஸ்காம் சமீபத்தில் எடுத்த ஆய்வறிக்கையின் படி 2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆன்லைன் கேம்ஸ்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 628 மில்லியனாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றின் வர்த்தகம் சுமார் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீத வளர்ச்சியை சந்தித்து வரும் ஆன்லைன் கேம்ஸ்களின் வர்த்தகம், 2023-ஆம் ஆண்டில் ரூ.11 ஆயிரத்து 400 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT