5ஜி சந்தையில் இந்தியாவுக்கு 2-ஆவது இடம்: ஹுவாவே
இந்தியா 5ஜி சந்தையில் அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் என சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவே தெரிவித்துள்ளது.
இந்தியா 5ஜி சந்தையில் அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் என சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (தெற்கு-கிழக்கு ஆசியா) ஜேம்ஸ் வூ தெரிவித்துள்ளதாவது:
செல்லிடப்பேசி வர்த்தகத்தைப் பொருத்தவரையில் இந்தியா புயல் வேக வளர்ச்சியை கண்டு வருகிறது. இதனை வைத்துப் பார்க்கும்போது, 5 ஜி சந்தையில் அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும்.
சர்வதேச தொலைத்தொடர்பு ஜிஎஸ்எம் கூட்டமைப்பு, உலகளவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5ஜி இணைப்புகளின் எண்ணிக்கை 140 கோடியாக இருக்கும் என கணித்துள்ளது. இது ஒட்டுமொத்த சந்தையில் 15 சதவீதம்.
அந்த கணிப்பின்படி பாதிக்கும் மேற்பட்ட 5ஜி இணைப்பு பங்களிப்பை அமெரிக்கா வழங்கும். அதேசமயம், இந்த 5ஜி இணைப்பில் சீனாவின் பங்களிப்பு 30 சதவீதமாகவும், இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாகவும் இருக்கும் என்றார் அவர்.
மடிக்கும் வசதியுடன் 5ஜி போன்: வசதிக்கேற்றபடி மடக்கி கொள்ளும் 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஹுவே தெரிவித்துள்ளது. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு போட்டியாக மடக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை சந்தைக்கு கொண்டு வருவதில் ஹுவாவே மும்முரமாக ஈடுபட்டுள்ளது.